இலங்கை
யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை
யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை
யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் கொரோனாத் தொற்றுக்குள்ளான சடலங்களை அநுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதற்கு போதிய வசதியின்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் சடலங்களை எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.போதனாவில் 17 சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றது. கோம்பையன் மயானத்தில் மின்தகனம் செய்யும் வசதிகள் காணப்படினும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 17 சடலங்களில் 4 சடலங்களை அநுராதபுரத்தில் மின்தகனம் செய்வதற்கு ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது. ஆனால் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போதைய ஊரடங்கு காலத்தில் அநுராதபுரம் செல்வது தொடர்பில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கல்நிலை ஏற்படாத வண்ணம் அநுராதபுரத்தில் எரிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – என்றார்.
You must be logged in to post a comment Login