rtjy 140 scaled
இலங்கைசெய்திகள்

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

Share

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட செயல்பாடுகளே சந்தையில் கீரி சம்பாவுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “நாட்டில் தேவையான அளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் இருக்கின்றபோதும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை பதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் அவற்றை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே கீரி சம்பாவிற்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது அரிசி மாபியாக்களினால் செயற்படுத்தப்படும் செயற்கை தட்டுப்பாடாகும்.

கடந்த சிறுபோகத்தில் கீரிசம்பா அறுவடை குறைவடைந்திருந்த போதும் அதற்கு முன்னர் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவடையின் போது பெருமளவு கீரி சம்பா கிடைத்துள்ளது.

அதனால் போதுமான வகையில் கீரிசம்பா கையிருப்பில் இருக்கிறது. அத்துடன் இம்முறை பெரும்போகத்தின் போதும் அதிகமாக கீரி சம்பா உற்பத்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கியுள்ளேன்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...