நாட்டில் தொற்று 2,960 – சாவு 184

covid 2

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்,

அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 960 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 71 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனாத் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

 

Exit mobile version