இலங்கையை தொடர்ந்து இந்தியர்களுக்கு விசா சலுகை வழங்கும் நாடு

rtjy 21

இலங்கையை தொடர்ந்து இந்தியர்களுக்கு விசா சலுகை வழங்கும் நாடு

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கோடு, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் தாய்லாந்தில் தங்கலாம் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகள் தாய்லந்திற்கு வருகின்ற நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிக சுற்றுலா பயணிகளை கவரும் முயற்ச்சியாக இந்தியா மற்றும் தைவான் குடிமக்களுக்கு விசா சேவையை தாய்லாந்து அரசு வழங்கியுள்ளது.

அதன்படி இந்தியர்கள் விசா பெறாமலே 30 நாட்கள் வரை தாய்லந்தில் தங்கலாம் எனவும் இந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் மே 10ஆம் திகதி வரை இந்த விசா சலுகை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவுக்கு விசா தள்ளுபடியை அறிவித்திருக்கும் 2வது நாடாக தாய்லாந்து அமைந்துள்ளது. இதற்கு முன் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version