தமிழீழத்திற்கு அருகில் இந்திய மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்
இந்தியாவில் மோடிக்கு அடுத்ததாக முக்கியமானவராக கருதப்படும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இலங்கையில் நடந்தது படுகொலை என கூறிய கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“இலங்கையில் நடந்தது படுகொலை என்ற கருத்தை ராமேஸ்வரத்தில் தமிழீழத்திற்கு பக்கத்தில் நின்று கூறியது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
இந்த கருத்தை அவர் இலங்கையை அடிபணிய வைப்பதற்காக கூறினாரா? அல்லது இந்திய உள்நாட்டு அரசியலுக்காக கூறினாரா? என்ற ஆராச்சியில் நாம் ஈடுபட தேவையில்லை.
இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு எமது கோரிக்கைகளை மேம்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும்.”என கூறியுள்ளார்.
Leave a comment