இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

24 663146bc45da6

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த முருகன் என்ற கடற்றொழிலாளர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்த வோக்கி டோக்கி மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக தமிழக கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்தநிலையில் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளான ஆறாவது சம்பவம் இதுவாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த தாக்குதல் குறித்து இலங்கையின் கடற்படை இன்னும் பதில் எதனையும் வழங்கவில்லை.

Exit mobile version