இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய- இலங்கை பயணிகள் கப்பல் சேவை குறித்து தகவல்

rtjy 105 scaled
Share

இந்திய- இலங்கை பயணிகள் கப்பல் சேவை குறித்து தகவல்

தமிழகத்தின் நாகப்பட்டிணம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகிறது என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

செரியாபாணி’ என்ற பெயரைக்கொண்ட இந்த பயணிகள் கப்பலில் பயணிகளுக்கான அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்றும் எவ்வளவு நிறை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நாகை – இலங்கைக்கு இடையே இயக்கப்பட உள்ள பயணிகள் கப்பல் கொச்சினில் தயாரிக்கப்பட்டதாகும்.

செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ள குளிரூட்டி வசதியுடன் கூடிய இந்த பயணிகள் கப்பல் (07.10.2023) நாகை துறைமுகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செரியாபாணி கப்பல் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில்; சோதனைகளை ஓட்டங்களை நடத்துகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் 60 கடல் மைல் கல்லில் உள்ளது. இதனால் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் எரிபொருள் தேவைப்படும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நாகை – இலங்கை இடையே பயணிக்க 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 6500 இந்திய ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்ட செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து வெறும் 3 மணி நேரத்தில் இலங்கையை சென்றடைய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...