22 15
இலங்கைசெய்திகள்

கப்பல்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறும் பயணிகளுக்கு விசேட சலுகை

Share

கப்பல்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறும் பயணிகளுக்கு விசேட சலுகை

கப்பல்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கப்படும் வரியை இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளது என  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் படகுச் சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். (இண்ட்சிறி பெர்ரி சேர்விஸ் (IndSri Ferry Service Pvt – இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் படகுச் சேவை வழங்கும் நிறுவனம்)

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இவர்,

“இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையேயான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக இயங்குகிறது.

இந்த படகு சேவையானது வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கும்.

குறித்த சிவகங்கை பயணிகள் கப்பல், 2023 ஒக்டோபர் இல் இரு நாடுகளுக்கும் இடையேயான தனது படகு சேவையை மீண்டும் ஆரம்பித்தது.

மேலும், சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2024 ஒகஸ்ட் 16 அன்று அதன் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்திய மற்றும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும்போது அதற்கான பிரயானசீட்டக்களை இணையம் பதிவு செய்யலாம்.

படகுச் சேவையை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்காக, நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை ஈடுகட்ட இந்திய அரசு ஒரு வருடத்திற்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்குகிறது.

அத்தோடு முன்னோக்கிப் பார்க்கும்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இணைப்பை விரிவுபடுத்துவதற்கும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கூடுதல் வழிகள் மற்றும் சேவைகளை ஆராயும் திட்டங்கள் இந்த சேவையில் காணப்படுகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...