24 664b65c06727c
இலங்கைசெய்திகள்

இலங்கையை மெய்நிகர் மாகாணமாக மாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள இந்தியா

Share

இலங்கையை மெய்நிகர் மாகாணமாக மாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள இந்தியா

2022ஆம் ஆண்டு இலங்கை திவாலானதன் பின்னர் சீனாவைக் காட்டிலும் இந்தியா இலங்கையில் அதிக செல்வாக்கை செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் இலங்கையை மெய்நிகர் மாகாணமாக மாற்றுவதற்கு இந்தியா பெறும் மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும் என்று இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவான International-relations analyst of Factum இன் தலைமை சர்வதேச உறவுகள் ஆய்வாளர் உதித தேவப்ரியா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான முக்கிய கருத்தொன்றை சீன செய்தித்தாளொன்று செய்தியாக்கியுள்ளது.

இந்தியா, ஏற்கனவே கொழும்பு துறைமுக முனையத்தின் அபிவிருத்தியை அதானி நிறுவனத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதோடு மன்னாரிலும், பூநகரியிலும் காற்றாலை மின்சாரத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அத்துடன் சீனாவினால் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை ரஷ்யாவுடன் இணைந்து அண்மையில் பொறுப்பேற்றது.

இலங்கையில் இந்திய நிறுவனங்களின் வருகைக்கு மேலதிகமாக, 2022 ஆம் ஆண்டில் புதுடெல்லி கொழும்புக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அவசரகால நிதியுதவியாக வழங்கியது.

இந்த நகர்வுகள் அண்டை நாடுகளில் பொருளாதாரம் மற்றும் வணிக நிறுவனத்தை அதிகரிப்பதற்கான இந்தியாவின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அண்மைய ஆண்டுகளில், துறைமுக மேலாண்மை முதல் எண்ணெய் மற்றும் எரிவாயு வரையிலான துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் சீனா, இலங்கையுடனான தனது பொருளாதார பங்காளித்துவத்தை ஆழப்படுத்தியுள்ளது.

சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு சீன அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதாக 2017 இல் இலங்கை அறிவித்தது.

நவம்பரில் சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக்கால் ஹம்பாந்தோட்டையை ஒட்டிய 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த கொழும்பு ஒப்புதல் அளித்தது.

இந்தநிலையில் கொழும்பை தளமாகக் கொண்ட சட்டத்தரணியும் வெளிநாட்டுக் கொள்கை ஆய்வாளருமான சரண கனங்கேகமகே, இந்திய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பல ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், இலங்கை சீனாவுடனான தனது உறவை “மதிப்பிழப்பு” செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இலங்கை தமது பொருளாதாரக் கொள்கையின் முக்கியத் திட்டமாக, சீனா மற்றும் இந்தியாவை நம்பி, தமது பயன்படுத்தப்படாத அல்லது செயல்படாத சொத்துக்களை நிர்வகிப்பதன் மூலம் அதிகபட்ச பலன்களைப் பெறுவதை நோக்காகக் கொண்டுள்ளது என்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆய்வாளருமான சரண கனங்கேகமகே தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...