இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய மற்றும் இந்திய பிரஜை ஒருவர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டெரிக் சார்லஸ் என்ற 66 வயதான பிரித்தானிய பிரஜை மற்றும் 31 வயதான அபின் ஜோசப் என்ற இந்திய பிரஜை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜை கொழும்பு 3இல் உள்ள ஹோட்டலில் அவர் தங்கியிருந்த அறையில் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்திய பிரஜை கொழும்பு 3இல் அமைந்துள்ள C20 அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் வந்து அடையாளம் காட்டியதன் பின்னர் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எல்.துஷ்மந்தவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Comments are closed.