நாட்டில் அதிகரிக்கும் பட்டினி! – தாய் தற்கொலைக்கு முயற்சி

964024 singer suicideattempt

உணவு வழங்க வழியில்லாததால்,  தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத,  தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த பெருந்துயர் சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய்,  தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர  சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை.

சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர்வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக்கொள்ள முடியாத தாய், தற்கொலை எனும் தவறான முடிவை நாடியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தற்போது போராடிக்கொண்டிருக்கின்றனர்.

#SriLankaNews

Exit mobile version