24 660268411585b
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் அதிகரித்துள்ள டொலர்

Share

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் அதிகரித்துள்ள டொலர்

ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் வர்த்தகச் சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருமானம் கணிசமான அளவில் மீண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வை வழங்குவதற்காக இன்று காலை (மார்ச் 26) கூட்டப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பின் போது, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் எஸ். ஜெகஜீவன் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, ஜனவரி முதல் பெப்ரவரி வரையில் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக தொழிலாளர்களின் பணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த மாதங்களில் சுற்றுலா வருவாய் 687 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்களின் பணம் மற்றும் சுற்றுலா வருவாய் ஆகிய இரண்டும் 2022 ஐ விட கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

மேலும், தொழிலாளர்களின் பணம் 2022 இல் 3.8 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 இல் 6 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

அத்தோடு, சுற்றுலா வருவாய் 2022 இல் 1.1 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 இல் 2.1 பில்லியன் டொலராக உயர்ந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....