நாட்டில் ஒரே நாளில் சமையல் எரிவாயு வெடிப்பு மற்றும் கசிவுகள் தொடர்பான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்று (6) பிற்பகல் இச்சம்பவங்கள் சார்ந்த முறைபாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஊடகத்துக்கு கருத்து தெரிவித்தார்.
இந்த சம்பவங்கள் கொள்ளுப்பிட்டி, கடுவெல, பலகொல்ல, ராகல, கெஸ்பேவ, முந்தலம, கொஸ்கம, கல்கிரியாகம, மீகொட மற்றும் ஊவாபரணகம போன்ற பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.
#SriLankaNews