இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றிரவு எரிபொருள் அதிகரிப்பைத் தொடர்ந்து இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறைந்தபட்சம் 19.5 சதவீதத்தால் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 32 ரூபா அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews

