வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் 200,000க்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
ஆனால் கொவிட் தொற்று காலங்களில் கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 53,000 ஆகக் குறைவடைந்திருந்தாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும், தற்போது வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய சூழலில் விலையேற்றங்களினால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் நாட்டை விட்டு வெளியேறுவதில் முனைப்பு காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews