உணவுப்பொதி விலை அதிகரிப்பிற்கான காரணம் வெளியானது

tamilni 78

உணவுப்பொதி விலை அதிகரிப்பிற்கான காரணம் வெளியானது

தேங்காய் விலை திடீரென அதிகரித்துள்ளமை உணவுப்பொதியின் விலை அதிகரிப்பிற்கு ஒரு காரணம் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

60 முதல் 80 ரூபாவாக இருந்த சாதாரண தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 முதல் 150 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

கறி தயாரிப்பில் தேங்காய் பாலை பயன்படுத்துவது அத்தியாவசியமானது எனவும், தேங்காயின் விலை உயர்வால் நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் குறிப்பிட்டுள்ளார்.

இதுவொரு கடினமான சூழல் என்பதுடன், எதிர்வரும் பண்டிகை காலங்களில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version