tamilni 332 scaled
இலங்கைசெய்திகள்

அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிப்பு

Share

அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் 150 ரூபாய் அறிவிடப்பட்ட நிலையில், தற்போது ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் பிரதியை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆன்லைன் அமைப்பு மூலம் ஆட்கள் பதிவுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ், புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும், பின்னர் படிப்படியாக அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் நிலவும் தொழில்நுட்ப பற்றாக்குறையும் ஒரு காரணம் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...