மோட்டார் வாகன பதிவுக் கட்டணங்கள் அதிகரிப்பு!

image f3a9edabc3

மோட்டார் வாகன பதிவுக் கட்டணங்களை நாளைய தினம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் வாகனங்களை சாதாரண முறைப்படி பதிவு செய்வதற்கு 2,000 ரூபாய் எனவும், முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்வதற்கு 3,000 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரே நாளில் பதிவு செய்வதற்கு 4,000 ரூபாய் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாமதமாகி பதிவு செய்வதற்கான கட்டணங்கள் 100 ரூபாயாகவும், மோட்டார் சைக்கிளுக்கான தாமத கட்டணம் 50 ரூபாயாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் தகவல்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான கட்டணம் 3,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version