நாட்டின் பணவீக்கம் உச்ச நிலையை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இம் மாதம் பொருட்களின் விலைகளும் குறைவடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளை சீர்செய்ய பல நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டியுள்ளது. பணவீக்கம் கடந்த மாதம் 69.8 வீதமாக அதிகரித்துள்ளது. இவ் அதிகரிப்பானது இலங்கையில் என்றுமில்லாத நிதி நெருக்கடியை காட்டி நிற்பதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், பணவீக்கத்தைக் குறைக்க வங்கிகள் வீதங்களை உயர்வாக வைத்திருக்க வேண்டும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews