இலங்கையில், நான்கு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் குடும்பங்கள் மின்பாவனையை நிறுத்திக் கொண்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் மொத்தமாக சுமார் 60 இலட்சம் குடும்பங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பு இவர்களை கடுமையாக பாதித்துள்ளது.
அதன் காரணமாக, கடந்த பெப்ரவரி தொடக்கம் இதுவரை சுமார் நான்கு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் குடும்பங்கள் குறைந்த பட்சம் ஒரு அலகு கூட பயன்படுத்தாமல் மின்சார பாவனையை நிறுத்திக் கொண்டுள்ளனர்.
அத்துடன் கடந்த காலங்களில் 90 அலகுகள் வரையான மின்சாரப் பாவனை கொண்டிருந்தோர்.
தற்போது 60 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அநீதியான முறையில் கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#srilanakNews