மைத்திரிபால சிறிசேன
அரசியல்இலங்கைசெய்திகள்

இன்று முதல் சுயாதீன வழியில் சு.க.! – மைத்திரி பகிரங்க அறிவிப்பு

Share

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராகிய நாங்கள், இன்று முதல் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளோம். அதன்படி, எங்களுடைய 16 உறுப்பினர்களும் சுயாதீனமாகச் செயற்படவுள்ளோம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. சபையில் இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முழுச் சமூகமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மருந்துகளுக்குக்கூடத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் மக்கள், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குச் சார்பாக சுதந்திரக் கட்சி இருக்கும்.

அவசரகால நிலைமை அமுல்படுத்தியுள்ளதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நீக்கி, 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். எனவே, இன்று முதல் நாங்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளோம். அதன்படி, எங்களுடைய 16 உறுப்பினர்களும் சுயாதீனமாகச் செயற்படவுள்ளோம்” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...

17 3
இலங்கைஅரசியல்செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைத் தடுக்க ஜனாதிபதி அநுர தலைமையில் அவசரத் திட்டம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சவாலாக ஏற்று, அனைத்து அரச துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது...

16 3
செய்திகள்உலகம்

பிரித்தானிய குடிவரவு விதிகளில் அதிரடி மாற்றம்: குறிப்பிட்ட 4 நாடுகளுக்கு விசா வழங்க தடை!

பிரித்தானியாவிற்கு மாணவர் விசா மற்றும் பணியாளர் விசா மூலம் வந்து தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை கடந்த...

15 3
செய்திகள்இலங்கை

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதல்: நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பு குறித்து விசாரணை!

இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் தொடர்பான...