இறக்குமதி செய்யப்படும் முட்டை தொடர்பில் அறிவித்தல்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தகவலின் படி , நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது..
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சதொச விற்பனை நிலையங்களில் அடுத்த வாரம் முதல் முட்டை ஒன்று 42 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை ஹோட்டல் மற்றும் பேக்கரிகளுக்கு விற்பனை செய்யும் திட்டம் நிறுத்தப்படும் என்று அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் மேலும், தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment