download 2 1 4
இலங்கைசெய்திகள்

உரத்தை பெற்றுக்கொள்ளாத விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Share

அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட சேற்று உரம் என்று அழைக்கப்படும் ரிஎஸ்பி (டிரிபிள் சுப்பர் பொஸ்பேட்) உரத்தை இதுவரை பெற்றுக் கொள்ளாத விவசாயிகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த கமநல சேவை நிலையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 10ஆம் திகதிக்குப் பின்னர் கமநல சேவை நிலையங்களில் உள்ள அனைத்து சேற்று உர தொகுதிகளும் பிரதான களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

லங்கா உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் ஆகியவை இணைந்து  நாடு முழுவதிலும் உள்ள கமநல சேவை நிலையங்களுக்கு 36 ஆயிரம் மெற்றிக் தொன் ரிஎஸ்பி உர தொகுதிகளை விநியோகித்துள்ளன.

விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான இலவச உரம் வழங்கும் நடவடிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்கள் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திடம் ரிஎஸ்பி உரம் மற்றும் ஏனைய உரங்களின் விநியோகத்தின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.

6 இலட்சத்து 77 ஆயிரத்து 139 விவசாயிகள் 22 ஆயிரத்து 644 மெற்றிக் தொன்  உரத்தை பெரும் போகத்தில் இலவசமாகப் பெற்றுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...