எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டால் மக்கள் மேலும் அசௌகரிய நிலையை எதிர்நோக்க நேரிடும்.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. கனியவள கூட்டுதாபனம் பாரிய நட்டத்தில் இயங்குவதனால் திறைசேரியிடமிருந்து நிவாரணம் கோரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நிவாரணம் கிடைக்காவிட்டாலும் தற்போதைய விலையில் எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Leave a comment