8 7
இலங்கைசெய்திகள்

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்

Share

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுவாச நோய்களுக்கான சிகிச்சையாக ‘இன்ஹேலர்’களை பயன்படுத்த வைத்தியர்கள் பரிந்துரைத்தாலும், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அதற்கு அடிமையாகிவிடுமோ என அஞ்சுவதாகவும், ஆனால் அது அவ்வாறு இல்லை என்றும், பெரியவர்கள் புகைப்பிடிக்கின்றமையே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நிலவும் மழை மற்றும் காலநிலை காரணமாக சளி அதிகரித்து இருமல், சளி, வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏனைய தொற்று காய்ச்சல்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15
இலங்கைசெய்திகள்

செம்மணியை பார்வையிடவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிடவுள்ளது. இலங்கை...

14
இலங்கைசெய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சி வேண்டுகோள்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சியிடம் இருந்து நேற்றையதினம் வேண்டுகோள் ஒன்று கிடைக்கப்பெற்றது என...

13
இலங்கைசெய்திகள்

செம்மணி தடயப்பொருட்களை பார்வையிட மக்களுக்கு அழைப்பு.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

யாழ். சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்களை பொதுமக்களுக்கு காண்பித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள...

12
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வரைவு சட்டமூலத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இன்னும் இரண்டு...