அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதத்திற்கான அரச ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 135 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும்அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment