சுட்டெண் மறந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

maxresdefault

2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (23) வெளியாகிய நிலையில் பெரும்பாலான மாணவர்கள் தமது சுட்டெண் மறந்துள்ளனர்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்

அவ்வாறு சுட்டெண்ணை மறந்த மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடவோ அல்லது தரவிறக்கம் செய்யவோ முடியும்.

எந்த சந்தர்ப்பத்திலும், பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும் அதற்காக பணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில் , பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் அது தொடர்பில் அறிந்துகொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

011 2 784 208
011 2 784 537
011 3 140 314

 

Exit mobile version