இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! மத்திய வங்கி நம்பிக்கை
இலங்கைசெய்திகள்

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! மத்திய வங்கி நம்பிக்கை

Share

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! மத்திய வங்கி நம்பிக்கை

இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொடுப்பனவு நிலுவை நிலைமைகளின் முன்னேற்றம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதி முதல் 286 Hs குறியீடுகள் தொடர்பான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தவுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாணயக் கொள்கை மதிப்பாய்வுக்குப் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு: மத்திய வங்கி வெளியிட்டுள்ள நம்பிக்கை | Import Restrictions Will Be Relaxed

இதற்கிடையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணி வரவின் மாற்று விகிதத்தில் அழுத்தங்களை ஏற்படுத்தாது என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

மேலும், உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் பணப்புழக்க நிலைமைகள் சமீபத்திய மாதங்களில் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் வங்கி அறிவித்துள்ளது.

அரசாங்கப் பத்திரச் சந்தையில் நிகர வெளிநாட்டு முதலீட்டு வரவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

வரவு – செலவுத் திட்ட ஆதரவிற்காக பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் நிதியைப் பெற்றுள்ளது என்றும், இந்த ஆண்டின் எஞ்சிய காலத்தில் மேலதிக வரவுகள் எதிர்பார்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

2022 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 2023 இல் சுற்றுலா மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 2023 இல் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா சுமார் 19 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.

மேலும், உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளத.

மேலும் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதமாக 200 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...