பதுளை ரயில் நிலையத்துக்கு அருகில் ‘பொடி மனிக்கே’ ரயில் தடம் புரண்டதால், மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இன்று காலை 8.40 மணியளவில் குறித்த ரயில் தடம் புரண்டது என ரயில் திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த ரயிலைத் தடமேற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
#SriLankaNews