இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியக்குழு
நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவே இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
இந்தக்குழு, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள், நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னைய ஒப்பந்தங்களின் நமைமுறையாக்கம் போன்றவற்றை மதிப்பீடு செய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீளாய்வுக்கு பின்னர் இலங்கைக்கான அடுத்த தவணை கடனை, சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக எதிர்வரும் ஜனவரி அளவில் இந்த கடன் தவணையை தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.