இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த 25 ஆம் திகதி வெளியானது. இவ்வறிக்கைமீது நாடாளுமன்றத்தில் விவாதம் வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன.
ஏப்ரல் முதல்வாரத்தில் விவாதத்தை வழங்குவது தொடர்பில் அரசு பரிசீலித்துவருகின்றது.
இந்நிலையிலேயே மேற்படி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமப்பிக்க, நிதி அமைச்சர் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
#SriLankaNews