இலங்கைக்கு உதவுவது அவசியம்! – IMF தெரிவிப்பு

imf

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்திய மாநாட்டின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு இலங்கையுடன் ஒன்றிணைந்து தமது பங்களிப்பை வழங்குவது முக்கியமானது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version