IMF இறுதித் தீர்மானம் இன்று!

IMF Jpeg

இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதுடன், இதற்கான அனுமதி தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version