சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தகவல்

tamilni 324

சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தகவல்

இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமான சேகரிப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை கொண்டுள்ளது.

எனினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கான 2.9 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை இது தடம் புரளச் செய்ய வாய்ப்பில்லை என வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட நான்கு வருட கடன் ஒப்பந்தத்தின் முதல் மறுஆய்வின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், நிதியமைச்சராக இருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்தனர்.

இந்த நிலையில் முதல் மதிப்பாய்வை நிறைவேற்றுவதற்குத் தேவையான பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றமும் இதில் அடங்கும் என்று இலங்கை அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதிய குழு, தமது இரண்டு வார பயணத்தின் முடிவில் இன்று (27.09.2023) புதன்கிழமை பிற்பகல் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளது.

Exit mobile version