எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தாக்க முற்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
எதிரணி எம்.பிக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தமது கட்சி எம்.பிக்கள் சபை அமர்வில் பங்கேற்கமாட்டார்கள் என எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ஆளுங்கட்சி எம்.பிக்கள் மனுஷ நாணயக்காரவை சபை வளாகத்தில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவத்துக்கும் கடும் எதிர்ப்பை அவர் வெளியிட்டார்.
#SriLankaNews