யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை-வல்லிபுரக் குறிச்சி மூச்சம்பதம் கோயிலுக்கு அண்மைய பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும், பொலிஸார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் முறையிட்டதுடன், நேரிலும் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.
#SrilnkaNews