ஜனாதிபதி வீடு சென்றால், பதவி ஏற்கத் தயார்! – சஜித் விடாப்பிடி

sajith 3 2

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், பிரதமர் பதவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாச தயாராகவே இருக்கின்றார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரான லக்‌ஷ்மன் கிரியல்ல இன்று அறிவித்தார்.

விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

” சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டை மீட்பதற்காக பிரதமர் பதவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாச தயார். எனினும், இந்த ஜனாதிபதியின்கீழ் பிரதமர் பதவியை ஏற்கமுடியாது. அவர் பதவி விலகவேண்டும். இந்த விடயத்தில் எமது கட்சி உறுதியாக நிற்கின்றது.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு வரும். நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடகப்பட்டுள்ளது.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version