இறக்குமதித் தடை தொடருந்தால் வெளியேறுவோம்! – இலங்கைக்கு எச்சரிக்கை

shutterstock 1619626447 1024x614 1

இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும்  இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version