அடக்குமுறையை கையாண்டால் போராட்டம் தொடரும்!! – அரசுக்கு எச்சரிக்கை

image 6a0fa5f496

வைத்தியசாலைகளுக்குள் இராணுவத்தினரையோ அல்லது பொலிஸாரையோ களமிறக்கி வேலைநிறுத்தத்தை ஒடுக்கினால், நிச்சயமாக வேலை நிறுத்தம் தொடர் போராட்டமாக மாறும் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

மேலும், அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்தே போராட்டத்தின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து சுகாதார ஆதரவு சேவைகளும் இன்று காலை 6.30 மணிக்கு பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்ததாக தெரிவித்த ரவி குமுதேஷ், அனைத்து சுகாதார நிபுணர்களும் காலை 8.00 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version