24 மணித்தியாலங்களுக்கு அதிகமாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியர்களை நாடுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருவதால் டெங்கு காய்ச்சலின் பரவல் மேலும் அதிகரிக்கும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில், இவ் வருடத்தில் 61391 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே 24 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாக இருந்தால் உடனடியாக வைத்தியர்களை நாடுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
#SrilankaNews