BHooIZvcln0O8JUWvqnw
இலங்கைசெய்திகள்

நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை!

Share

இலங்கையர்களின் வாழ்க்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் மூன்று திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், சூரிய சக்தி திட்டம் மற்றும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது ஆகிய மூன்று அவசர வேலைத்திட்டங்களாகும்.

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இலங்கை மக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

வடக்கில் மூன்று பகுதிகளில் சூரிய மின்சக்தி திட்டத்தை விரைவில் விரைவில் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், காங்கசந்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகளை விரைவில் தொடங்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...