இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை
இலங்கையில் ஐஸ் போதைப்பொருளை சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சாக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கண்டறிதல்களின்படி, மெத்தம்பேட்டமைன் பயன்பாடு பாடசாலை மட்டத்தில் அதிகமாக இல்லை என்று நாணயக்கார கூறியுள்ளார்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டு மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1 Comment