இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

tamilni 122

இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில், மைதானத்தில் இருந்து திரும்பிய போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய நேற்றைய போட்டியில் குசல் மெண்டிஸ் 77 பந்துகளுக்கு 122 ஓட்டங்களை பெற்று வரலாற்றில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version