“நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன்.” –
என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி இன்று அறிவித்தார்.
நாட்டில் தற்போது போர் இல்லை. எனவே, ஜனநாயகத்தை ஒடுக்க அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுவது தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அனுசபிரியதர்ஷன யாப்பாவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
#SriLankaNews