நான் ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பிரதமர், அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் அலரி மாளிகையில் இன்று முற்பகல் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதையும், வரிசையில் நிற்கும் முறையையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
குறுகிய காலத்தில் இந்த வரிசைகளை இல்லாது செய்ய முடியும் என நம்புகின்றேன்.
பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும்.
இந்தப் பொறுப்புகளை இன்னொருவர் நிறைவேற்றும் வரை காத்திருப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளின் அளவை நாம் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளோம்.
இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் நான் இருக்கின்றேன் என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment