ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாட்டின் பெரும்பான்மை பலம்கொண்ட அரசியல் கட்சியாகும். அந்தக் கட்சியைக் கைவிட்டு வேறு கட்சியொன்றுடன் இணைவதற்கு எந்தவித தீர்மானமும் கிடையாதென அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச , முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் வெற்றிகரமாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வேறுகட்சியுடன் இணைவதற்கு யோசிக்கும் வகையில் மூளைக் கோளாறு எதுவும் தமது கட்சியினருக்கு கிடையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமது கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவித அவசியமும் கிடையாது. அத்தகைய மூளைக்கோளாறு எதுவும் இல்லை.
பொதுஜன பெரமுன மற்றும் அதனோடு இணைந்த சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்துள்ளதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அதுதொடர்பில் நான் அறியவில்லை. பெரும்பான்மை பலமுள்ள கட்சியொன்றை விடுத்து அதிகாரமற்ற கட்சியொன்றுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews