அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, வெள்ளத்தில் சிக்கியிருந்த தன்னைச் போர் வீரர்கள் காப்பாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது உருக்கத்துடன் தெரிவித்தார்.
தான் ஒரு சிற்றூந்தோடு (Van) வெள்ளத்தில் சிக்கியதாகவும், தனது சிற்றூந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பின்னர், அவரது சிற்றூந்து வயலொன்றில் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். “நான் ஒரு சிங்களப் போர் வீரனால் காப்பாற்றப்பட்டேன். நான் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டேன்,” என்று இராமனாதன் அர்ச்சுனா கூறினார். வெள்ளத்தின்போது தன்னை மீட்புப் படையினர் காப்பாற்றி, கடற்படை முகாமில் தஞ்சமடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தின் போது உயிர் காக்கும் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் விதமாக, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த அவர் “தயவுசெய்து பாதீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கு ஒரு பெரிய தொகையை ஒதுக்குங்கள்,” என அவர் உணர்ச்சிப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சம்பவம், அனர்த்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.