செய்திகள்அரசியல்இலங்கை

மலைய மக்களின் வாழ்க்கை நிலைமையை நான் நேரடியாக பார்த்தேன் – ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா

Share
un 1
Share

‘ஓரம் கட்டப்படுதல், பாரபட்சம், சுரண்டல் இயல்பிலான வேலை நிலைமைகள் என மிக மோசமான வாழ்க்கை நிலைமைகளை மலையகத் தமிழர்கள் அனுபவிப்பதை நான் நேரடியாக பார்த்தேன்”  என ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் 8 நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இவர், ஒபோகாட்டா அரசாங்க அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கல்விமான்கள், குடிபெயர் தொழிலாளர்கள் மற்றும் ஊழியச் சுரண்டல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரையும் ஒபோகாட்டா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் சமகால அடிமை வடிவங்களை குறைப்பதற்கான வலுவான சட்டகத்தை கொண்டுள்ளது.

எனினும் சில பலவந்த ஊழியம் மற்றும் அடிமை சேவகம் என்பவற்றுக்கு இணையாக சாதி அடிப்படையிலான பாரபட்சம், ஊழியச் சுரண்டல் காணப்படுகின்றன.

அதனை தவிர்த்து வெற்றி கொள்வதற்கு பெரும்பாலும் இலங்கை அரசாங்கம் அனைவரையும் உள்வாங்கி அனைத்து துறைகளையும் அரவணைத்து கொள்ளும் ஒரு சமூகமாக உருவாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...