பீ.பி.ஜயசுந்தர
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச சகோதரர்களால் ஓரங்கட்டப்பட்டுள்ளேன்! – பீ.பி.ஜயசுந்தர கவலை

Share

ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டபோதும் தான் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தான் வாழ்நாளின் பெரும்பகுதியை ராஜபக்சக்களுக்காக உழைத்த போதிலும் ஒரு தொலைபேசி அழைப்புக்கூட அவர்களிடமிருந்து வருவதில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், உடனடியாக ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பீ.பி.ஜயசுந்தர நியமிக்கப்பட்டார்.

சில காலம் நிதி அமைச்சின் செயலாளராகவும் இருந்த அவர், ஏற்கனவே நாட்டில் சர்ச்சைக்குரிய நபராக இருந்தார். எனினும், 2 ஆண்டுகள் நிறைவடையும்போது பல பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டவர் இறுதியில் தனது பதவியை இராஜிநாமா செய்துகொண்டார்.

ஜனவரி மாதம் அவர் ஓய்வுபெற்றார். ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட ஜயசுந்தர, ஓய்வின் பின்னர் அனைவராலும் மறக்கப்பட்ட நபராக மாறியுள்ளார்.

இந்தநிலையில், அண்மையில் அரசின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்த அவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“நான் எனது 40 வருட சேவை காலத்தில் பெரும்பகுதி ராஜபக்சக்களுக்காக உழைத்துள்ளேன். ஆனால், நான் ஓய்வுபெற்ற பின்னர் எவரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

தொலைபேசி அழைப்பேற்படுத்தி எனக்கு நன்றி சொல்லவில்லை. ஒருவரும் என்னிடம் பேசவில்லை” என்று விரக்தியுடன் உயர் அதிகாரியிடம் அவர் கூறியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...