sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

அழிவு ஏற்படும் என 2020இல் எச்சரித்திருந்தேன்! – சஜித் சுட்டிக்காட்டு

Share

“இன்று நாடு வீழ்ச்சியடைந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த அழிவு ஏற்படும் என நான் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்தே நாட்டுக்கு வெளிப்படுத்தினேன்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சுதேச மற்றும் பாரம்பரிய வைத்தியர்களின் குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவரை நேற்றுக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துத் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே குபேரர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. இவ்வாறு வரிச்சலுகை பெற்ற செல்வந்தர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அது தொடர்பாக அதிசயமாகப் பேசினர்.

சுதேச மருத்துவமும் பாரம்பரிய மருத்துவமும் காலம் காலமாக நம் நாட்டில் மதிப்புமிக்க தொழிலாக இருந்து வருகின்றது.

இன்று உண்மை வென்று வருகின்றது. உண்மையை வென்றெடுப்பதற்கு மக்கள் கஷ்டப்பட வேண்டியுள்ளமை துரதிஷ்டவசமானது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 13
செய்திகள்இலங்கை

நடிகர் விஜய் தனது விருப்பமான நடிகர்: இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026-ல் நாமல் ராஜபக்ஷ கருத்து

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு...

16 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 968 சந்தேகநபர்கள் கைது!

இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளின்...

15 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு மீண்டும் வரும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்: 6 ஆவது கடன் தவணைக்கான மீளாய்வு ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...

14 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரந்தகஹமுல களஞ்சியசாலையைத் திறந்த அரசு: அரிசி விலை உயர்வுக்குத் தீர்வு!

இலங்கையின் அரிசி விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மரந்தகஹமுல (Marandagahamula) களஞ்சியத் தொகுதியை, 13...